Posts

"சின்ன கடை, பெரிய சுவை: குளித்தலை சபரி ஹோட்டல்"

Image
குளித்தலை சபரி ஹோட்டல் -- ஒரு சுவையான குஷ்கா அனுபவம்  கடையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தொடக்கம் குளித்தலையின் நடுவுல, ஒரு 10*10 அடி கடையில இருந்து வர்ற மசாலா வாசனை உங்கள தூக்கிட்டு போகும்!  சபரி ஹோட்டல் - சின்ன இடம், ஆனா பெரிய சுவை. இன்னைக்கு நான் அங்க சாப்பிட்ட குஷ்கா அனுபவத்த பத்தி சொல்றேன். நீங்க எப்பவாவது ஒரு சின்ன கடையில பிரியாணி மாதிரி டேஸ்ட் உள்ள குஷ்கா சாப்பிட்டிருக்கீங்களா? குளித்தலை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல காவேரி நகர் உள்ள நுழைஞ்சா 5,6 கடை தள்ளி வலது பக்கம் மலர் xerox எதிர் புறம் இருக்கு. சுத்தமான மேஜைகள், சுவர்ல மெனு போர்டு, எல்லா  டேபிளும் ஃபுல்லா இருக்கும்... அரை சாப்பாடு, முழு சாப்பாடு, குஷ்கா, தக்காளி சாப்பாடு தயிர் சாப்பாடு லெமன் சாப்பாடு கொத்தமல்லி சாப்பாடு எல்லாம் இருக்கு.. குஷ்கா ₹50, தயிர் சாதம்,லெமன் சாதம், புளி சாதம் ₹40")  குஷ்கா:பிரியாணி மாதிரி மசாலா நிறைஞ்சு, "ஒவ்வொரு கரண்டி சாப்பாடும் அப்படியே நாக்குல ஒட்டிக்கிச்சு" சைடு டிஷ் குருமா, வெங்காய பச்சடி, ஆம்ப்லேட் . ஏன் பிடிச்சுது?"எளிமையான பரிமாறல், ஆனா சுவைல பஞ்சமே இல்ல,தயிர் சாதம் & புளி சாதம...